செவ்வாய், 13 டிசம்பர், 2011

ப்ரெட் சன்னா

  • ப்ரெட் துண்டுகள் - 10
  • நெய் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சன்னா - ஒரு கப்(வேகவைத்தது)
  • உப்பு - தேவையான அளவு
  • மசாலாவிற்கு:
  • வெங்காயம் - 1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - அரை தேக்கரண்டி
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பூண்டு - ஆறு பல்
  • கரம் மசாலா- அரை - தேக்கரண்டி
  • தயிர் - ஒரு ஸ்பூன்
  • சீரகம் - கால் தேக்கரண்டி


Seimurai:


  • மசாலாவுக்கு தேவையான பொருட்களை அரைக்கவும். சன்னாவை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.


  • வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போகும் படி வதக்கவும்.பின் அதில் உப்பு,சன்னாவை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்கவும்.


  • ஒரு ப்ரெட் துண்டை எடுத்து அதில் நெய் தடவி தோசைகல்லில் போட்டு இருபுறமும் நெய்விட்டு ரோஸ்ட் போல எடுத்து சன்னா கிரேவி உடன் பரிமாறவும்.